/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாட்டு வெடி வெடித்த போது கார் முற்றிலும் எரிந்து நாசம்
/
நாட்டு வெடி வெடித்த போது கார் முற்றிலும் எரிந்து நாசம்
நாட்டு வெடி வெடித்த போது கார் முற்றிலும் எரிந்து நாசம்
நாட்டு வெடி வெடித்த போது கார் முற்றிலும் எரிந்து நாசம்
ADDED : அக் 29, 2024 03:45 AM

நாமக்கல்: நாமக்கல் - சேலம் சாலை, பொம்மைக்குட்டைமேடு அருகே உள்ள தாளம்பாடியைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி செல்லம்மாள், 85. வயது மூப்பு காரணமாக, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இதையடுத்து, ப.வேலுார் அடுத்த கொந்தளத்தை சேர்ந்த நகுல்ராஜ், 45, என்பவர், நண்பர் செல்வத்துக்கு சொந்தமான, 'இன்னோவா' காரை எடுத்துக்கொண்டு, சின்னதாராபுரம் கன்னிவாடியில் உள்ள பட்டாசு கடையில், 15 சரம் வெடி வாங்கினார்.
தொடர்ந்து, நேற்று மதியம் 12:00 மணிக்கு துக்க வீட்டின் அருகே காரை நிறுத்தி, டிக்கியை திறந்து, இரண்டு வெடி சரத்தை, அங்குள்ள மரத்தில் கட்டி பற்ற வைத்தனர். வெடி வெடித்ததில் தீப்பொறி பறந்து, கார் டிக்கியில் வைக்கப்பட்டிருந்த வெடி சரத்தில் விழுந்தது. அதில் தீப்பிடித்து, பிற வெடிகள் வெடித்து சிதறின.
இதில், டீசல் டேங்கில் தீப்பற்றி கார் கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து, நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீவிபத்தில், கார் பாகங்கள் வெடித்து நாலா பக்கமும் சிதறியதால், மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கார் எரிந்து எலும்பு கூடானது.