/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துத்திக்குளம் புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் வரும் 18ல் தேர்த்திருவிழா
/
துத்திக்குளம் புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் வரும் 18ல் தேர்த்திருவிழா
துத்திக்குளம் புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் வரும் 18ல் தேர்த்திருவிழா
துத்திக்குளம் புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் வரும் 18ல் தேர்த்திருவிழா
ADDED : ஜன 15, 2025 12:24 AM
துத்திக்குளம் புனித வனத்து சின்னப்பர்
ஆலயத்தில் வரும் 18ல் தேர்த்திருவிழா
நாமக்கல்: சேலம் மறைமாவட்டம், சேந்தமங்கலம் பஞ்., துத்திக்குளத்தில், புனித வனத்து அந்தோணியார், புனித வனத்து சின்னப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில், ஆண்டு தோறும், தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு விழா, வரும், 17ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு, நாமக்கல் மறை
மாவட்ட முதன்மை குரு, தாமஸ் மாணிக்கம் தலைமையில், கொடியேற்றம், செபமாலை, திருப்பலி நடக்கிறது.
வரும், 18ல், புனித வனத்து அந்தோணியார் திருவிழா நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, கொசவம்பட்டி ஆர்.சி., பங்கு தந்தை அமல் மகிமைதாஸ் தலைமையில் திருப்பலி நடக்
கிறது. தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் எழுந்தருளும் புனிதர்கள், முக்கிய வீதி வழியாக பவனி வந்து, பக்தர்களுக்கு ஆசீ வழங்குகின்றனர்.
வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் மெழுகுவர்த்தி
ஏற்றியும், மாலை அணிவித்தும், புனிதரை வணங்குகின்றனர்.
வரும், 19ல், புனித வனத்து சின்னப்பர் திருவிழா நடக்கிறது. அதையொட்டி, மாலை, 6:00 மணிக்கு, கெபியில் நவநாள் செபமாலை, திருப்பலி நடக்கிறது. இரவு, 10:00 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் பங்கு தந்தை அருள்ராஜ், கோவில் பிள்ளை பிலவேந்திரன், மணியக்காரர் ஜான்பீட்டர், நாட்டாமை பன்னீர்செல்வம், பங்கு மக்கள், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.