/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நிறைவு
/
மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நிறைவு
மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நிறைவு
மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நிறைவு
ADDED : செப் 24, 2024 01:28 AM
நாமக்கல்: தமிழகம் முழுதும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி, அந்தந்த மாவட்ட தலைநகரங்களில், கடந்த, 10ல் தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான விளையாட்டு போட்டி, பொதுப்பிரிவினர், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறானிகளுக்கான விளையாட்டு போட்டி என, ஐந்து பிரிவுகளில், 15 வகையான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
இதில் பங்கேற்க, 31,655 வீரர், வீராங்கனைகள் இணைய வழியில் விண்ணப்பித்திருந்தனர். அதில், 25,795 பேர் கலந்துகொண்டனர். இதில், தனி நபர் போட்டியில், முதல் மூன்று இடங்களை பிடித்-தோருக்கு, 5,000, 3,000, 1,000
ரூபாய் என, பரிசுத்தொகை வழங்-கப்பட உள்ளது. பரிசு வழங்கும் விழா, வரும், 27ல் நடக்கிறது.
கடைசி நாளான நேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கான குண்டு எறிதல், ஓட்டப்பந்தய போட்டிகள் நடந்தன. இதில், 155 ஆண்கள், 114 பெண்கள் என மொத்தம், 269 பேர் கலந்து கொண்-டனர். மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள்,
மாநில போட்-டியில் பங்கேற்பர் என, விளையாட்டுத்துறை அதிகாரிகள் தெரி-வித்தனர்.