/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாரில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்த கவுன்சிலர், மகன்களுக்கு கும்மாங்குத்து
/
பாரில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்த கவுன்சிலர், மகன்களுக்கு கும்மாங்குத்து
பாரில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்த கவுன்சிலர், மகன்களுக்கு கும்மாங்குத்து
பாரில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்த கவுன்சிலர், மகன்களுக்கு கும்மாங்குத்து
ADDED : பிப் 21, 2025 02:03 AM

ராசிபுரம்:பாரில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்ததால், ராசிபுரம் நகராட்சி தி.மு.க., கவுன்சிலர், அவரது மகன்களுக்கு அடி, உதை விழுந்தது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி, 24வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கலைமணி, 54. இவரது மகன்கள் ஸ்ரீராம், 35, லோகசரவணன், 34. கோனேரிப்பட்டியில் வசிக்கின்றனர்.
ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் பின் பகுதியில், டாஸ்மாக் பார் நடத்தி வருபவர் ராஜா, 45. இவரிடம், கலைமணி, லோகசரவணன் மாமூல் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் பாரிலேயே லோகசரவணன், ராஜாவிற்கு தகராறு ஏற்பட்டது.
மாமூல் கொடுக்காததால் ஆத்திரமடைந்த லோகசரவணன், முறைகேடாக பார் நடத்துவதாக பல்வேறு துறைகளுக்கு புகார் அனுப்பினார்.
இது குறித்து, ராஜா, அவரது ஆதரவாளர்கள், நேற்று முன்தினம் இரவு கலைமணி வீட்டிற்கு சென்று கேட்டுள்ளனர்.
இதில், இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. கவுன்சிலர், அவரது மகன்களை, ராஜா தரப்பினர் தாக்கியுள்ளனர். காயமடைந்த கலைமணி, அவரது மகன்கள் மற்றும் இருவர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு சேர்ந்த இடத்திலும், இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.
முதலுதவிக்கு பின், தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி, கலைமணி அங்கிருந்து சென்றுள்ளார். ராசிபுரம் போலீசார் அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்.
இரு தரப்பினர் புகாரில், லோகசரவணன், ராஜா ஆகியோரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில், தி.மு.க., கவுன்சிலர் கலைமணி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்குவது, அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தகராறு குறித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

