ADDED : ஜூலை 24, 2024 08:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், : பள்ளிப்பாளையம் கொக்கராயன்பேட்டை அடுத்த, மொளசியை சேர்ந்த நடராஜன், 74, விவசாயி.
இவர் நேற்று முன்தினம் இரவு, தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் அமைக்கப்பட்-டுள்ள பைப்பை சீரமைக்கும் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது நிலை தடுமாறி கிணற்றில் விழுந்ததில் அவர் இறந்தார். திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், சட-லத்தை மீட்டனர். மொளசி போலீசார் விசாரணை செய்து வரு-கின்றனர்.