/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு சிறுமி மரணம்
/
அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு சிறுமி மரணம்
ADDED : அக் 11, 2024 01:09 AM
மல்லசமுத்திரம், அக். 11-
பருத்திப்பள்ளியில், அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு, 17 வயது சிறுமி பலியானார்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே, பருத்திப்பள்ளி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர்கள் பழனிவேல், 53, பொன்னம்மாள், 45, தம்பதியினர்.
இவர்களுக்கு பூவரசன், 27, கார்த்திக், 21 என மகன்கள், 17 வயதில் மகள் உள்ளனர். இவர்களது மகள் இங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, மாற்று சான்றிதழ் வாங்கி கொண்டு பள்ளியில் இருந்து இடை நின்றார்.
இந்நிலையில், புதுச்சத்திரம் அருகே நவணி கிராமத்தில் வசிக்கும் அவரது உறவினரான, செந்தில் என்பவரின் மகன் அரவிந்த், 23, என்பவருடன் காதல் ஏற்பட்டு, தவறான உறவு முறையில் ஈடுபட்டதால் அந்த சிறுமிக்கு கரு உருவாகியுள்ளது. அதை கலைக்க மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்து சாப்பிட்டுள்ளார். இதில், அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு, நேற்று முன்தினம் மல்லசமுத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று காலை உயிரிழந்தார்.
இது குறித்து, எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியின் காதலன் மற்றும் அவர்களது பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.