/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கும்பாபிஷேக விழா கோலாகலம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
/
கும்பாபிஷேக விழா கோலாகலம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
கும்பாபிஷேக விழா கோலாகலம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
கும்பாபிஷேக விழா கோலாகலம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED : நவ 04, 2025 02:04 AM
ராசிபுரம்,   ராசிபுரம் அருகே, பிள்ளா நல்லுாரில் கணபதி, பத்ரகாளியம்மன், நவகிரகங்கள், காலபைரவர், கருப்பணார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த மாதம், 12ல் முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
நேற்று  முன்தினம், காவிரி தீர்த்தம், முளைப்பாரி ஊர்வலம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். அன்று இரவு, கோபுர கலசம் வைத்தல், கண் திறப்பு நிகழ்ச்சியுடன்  முதலாம் கால யாக சாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, இரண்டு, மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. பின், கோபுர கலசங்களுக்கு ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் ஊற்றி   கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பச்சுடையாம்பாளையம் ஊராட்சியில் மகா கணபதி, சக்தி மாரியம்மன், வெள்ளையம்மா, பொம்மியம்மா சமேத மதுரை வீரன், மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று நடக்கிறது. கடந்த வாரம், முளைப்பாரி போட்டு கங்கனம் கட்டி விழா தொடங்கியது. நேற்று முன்தினம் காலை, நாமகிரிப்பேட்டையில் இருந்து புனிதநீர் எடுத்துக்கொண்டு பெண்கள், பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். நேற்று  காலை, 7:00 மணிக்கு
கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.

