/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செங்கழநீர் விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா கோலாகலம்
/
செங்கழநீர் விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா கோலாகலம்
செங்கழநீர் விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா கோலாகலம்
செங்கழநீர் விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா கோலாகலம்
ADDED : செப் 05, 2025 01:17 AM
நாமக்கல், நாமக்கல் மெயின் ரோட்டில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற செங்கழநீர் விநாயகர் கோவிலில், நேற்று கும்பாபி ேஷகம் நடந்தது. கடந்த, 25ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. கடந்த, 3ம் தேதி காலை மஹா கணபதி ேஹாமத்துடன் முதல்கால யாகசாலை பூஜை, இரவு மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. 9:00 மணிக்கு கோவில் கோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபி ேஷகம் செய்தனர். தொடர்ந்து செங்கழநீர் பிள்ளையார், பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபி ேஷகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோபுத தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.