/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோடை மழை தொடர்வதால் குறைந்தது வெப்பத்தின் தாக்கம்
/
கோடை மழை தொடர்வதால் குறைந்தது வெப்பத்தின் தாக்கம்
ADDED : மே 23, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்,பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோடை வெப்பம் சுட்டெரித்தது. குறிப்பாக காலை, 11:00 முதல் மாலை 5:00 மணி வரை வாகன ஓட்டிகள் வெளியில் செல்வதற்கே அச்சமடைந்தனர். அந்தளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இருந்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பால், இரவில் அனல் காற்றும் வீசியதால், மக்கள் அவதிப்பட்டனர்.
கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருவதால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. இரவில் குளிர் காற்றும் வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.