/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தலைமறைவு வாலிபரை விசாரணைக்கு அழைத்து சென்ற கர்நாடகா போலீசார்
/
தலைமறைவு வாலிபரை விசாரணைக்கு அழைத்து சென்ற கர்நாடகா போலீசார்
தலைமறைவு வாலிபரை விசாரணைக்கு அழைத்து சென்ற கர்நாடகா போலீசார்
தலைமறைவு வாலிபரை விசாரணைக்கு அழைத்து சென்ற கர்நாடகா போலீசார்
ADDED : நவ 05, 2024 02:05 AM
தலைமறைவு வாலிபரை விசாரணைக்கு
அழைத்து சென்ற கர்நாடகா போலீசார்
பள்ளிப்பாளையம், நவ. 5-
கர்நாடகா மாநிலம், கே.என்., போடூரை சேர்ந்தவர் நாகபூசணம், 26; மனைவி யுவராணி, 24. தம்பதியர், பள்ளிப்பாளையம் அருகே, எஸ்.பி.பி., காலனியில், கடந்த ஒரு மாதமாக தங்கி, கூலி வேலைக்கு சென்று வந்தனர். நாகபூசணம் மீது, கர்நாடகா மாநிலத்தில் டூவீலர் திருட்டு வழக்கு உள்ளது. அவர் தலைமறைவாக இருந்ததால், போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நாகபூசணத்தின் மொபைல் போன் சிக்னலை வைத்து, நேற்று மாலை, கர்நாடாக போலீசார் பள்ளிப்பாளையம் வந்தனர். தொடர்ந்து, நாகபூசணத்தை பிடித்த கர்நாடகா போலீசார், பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அங்கு தகவல் தெரிவித்துவிட்டு, நாகபூசணத்தை காரில் ஏற்றி கர்நாடகா அழைத்து செல்ல முயன்றனர். அப்போது, யுவராணி, போலீசாரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின், கர்நாடகா போலீசார், இருவரையும் காரில் ஏற்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.