/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலை நீர்வழிப்பாதை குப்பை காடாக மாறும் அவலம்
/
கொல்லிமலை நீர்வழிப்பாதை குப்பை காடாக மாறும் அவலம்
ADDED : நவ 04, 2024 04:41 AM
கொல்லிமலை: நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்-ளது. அடிவார பகுதிகளுக்கு நீராதாரமாகவும் உள்ளது. மழை பெய்யும்போது, கொல்லிமலையில் இருந்து வரும் மழைநீர், வாச்சுக்கல் ஆறு, பெரியாறு, வறட்டாறு ஓடைகளில் பாய்ந்து, ஏரியில் கலக்கிறது. இதில், முக்கிய நீர்வழிப்பாதை, காரவள்ளி பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு செல்லும் பிரதான சாலையின் அடிவார பகுதியில் காரவள்ளி அமைந்துள்-ளது. இங்கு வரும் மழைநீர் செல்ல பெரிய கால்வாய் அமைக்கப்-பட்டுள்ளது. இந்த தண்ணீர், இவ்வழியாக சென்று, சேந்தமங்-கலம் ஏரியை அடைகிறது. மழைக்காலத்தில் இந்த ஏரியில் தண்ணீர் தேங்கினால், கோடை வரை குறையாது.
இப்பகுதியில், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். ஆனால், காரவள்ளி பகுதியில் நீர் தடத்தில் குப்-பைகளை கொட்டி வருகின்றனர். குப்பைகள், விவசாய கழிவு-களை கொட்டுவதால், மழைக்காலத்தில் தண்ணீர் செல்வது தடை-பட்டு, அப்பகுதியிலேயே தேங்கி விடுகிறது. அது மட்டுமின்றி குப்பைகள் இருப்பதால் தண்ணீரும் மாசடைந்து விடுகிறது.
அதேபோல், ஓடையை சுற்றி முள் மரங்கள் உள்ளிட்ட புதர்கள் இருப்பதும் தண்ணீர் செல்ல தடையாக உள்ளது. எனவே இப்பகு-தியில் குப்பை கொட்டுவதை தடுப்பதுடன், புதர்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.