/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நண்பரை கத்தியால் குத்தியவர் கைது
/
நண்பரை கத்தியால் குத்தியவர் கைது
ADDED : ஆக 29, 2024 07:53 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, நண்பரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
காளப்பநாயக்கன்பட்டி, துத்திக்குளத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் பார்த்திபன், 44; மணல் வியாபாரி. தற்போது, நாமகிரிப்பேட்டை அண்ணா நகரில் வசித்து வருகிறார். இவரது நண்பர் பூபதி, 40, கட்டட மேஸ்திரி. பார்த்திபனிடம் இருந்து பூபதி மணல் வாங்கி வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு முறையாக பூபதி, பார்த்திபனிடம் மணல் வாங்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால், நேற்று தன் வீட்டிற்கு வந்த பூபதியிடம், பார்த்திபன் தகராறில் ஈடுபட்டார். வாக்குவாதம் கைகலப்பாக மறியது. இதில் ஆத்திரமடைந்த பார்த்திபன், அருகில் இருந்த கத்தியால் பூபதியின் கையில் குத்தினார். காயமடைந்த பூபதி ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பூபதி கொடுத்த புகார்படி, நாமகிரிப்பேட்டை போலீசார் பார்த்திபனை கைது செய்தனர்.