/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நட்டு விழா துவக்கம்

ADDED : அக் 17, 2025 01:40 AM
ராசிபுரம், ராசிபுரம், நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, நேற்று முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
ராசிபுரத்தில், நாமக்கல் சாலையில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஐப்பசியில் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா வரும், 21ல் பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. நவ., 5ல் பொங்கல் வைபவம், 6ல் தீமிதி விழா, தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி, 8ல் சத்தாபரணம் நடக்கிறது. திருவிழாவால், 15 நாட்கள் ராசிபுரம் பகுதி கோலாகலமாக காணப்படும்.
கோவில் விழா தொடங்குவதற்கு, பந்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. இதற்காக நேற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. 21ம் தேதி பூப்போடும் நிகழ்ச்சி நடந்தாலும், நேற்று முகூர்த்தக்கால் போடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் கோவில் பூசாரிகள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபி ேஷகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின், தீபாராதனை காட்டப்பட்டது.