/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொடர் திருட்டால் போலீசார் திணறல்
/
தொடர் திருட்டால் போலீசார் திணறல்
ADDED : ஜூலை 25, 2024 01:27 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த மக்கிரிபா-ளையம், சவுதாபுரம் கொல்லப்பட்டி, செட்டியார் கடை உள்-ளிட்ட பகுதியில், கடந்த ஒரு மாதமாக ஆடு, மாடு, டூவீலர்கள், மொபைல் போன்கள் என, தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன.கடந்த ஜூன், 1ல், வெப்படை பகுதியில் மின்வாரிய அலுவலர் வீட்டில், மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, 9 பவுன் நகை, 70,000 ரூபாய் பணத்தை திருடிச்சென்றனர்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன், எலந்தகுட்டை பகுதியில் உள்ள மொபைல் டவரில் அமைக்கப்பட்டுள்ள, 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேட்டரியை திருடி சென்றனர். வெப்படை சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை பிடிக்க போலீசார் ரோந்து பணியிலும், கண்காணிப்-பிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இன்னும் குற்றவாளி-களை கண்டுபிடிக்க முடியாமல் வெப்படை போலீசார் திணறி வருகின்றனர்.