ADDED : ஜன 28, 2025 07:01 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையத்தில், அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. நகர செயலாளர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:
இந்த ஆட்சியில் தினமும், 5 கொலை நடக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நமக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா, போதைப்பொருள் விற்பனை நடக்கிறது. மக்களை பற்றி கவலைப்படாமல், தி.மு.க., ஆட்சி செய்கிறது. போதைப்பொருள் அதிகரித்து விட்டதால், மீண்டும் இந்த அரசுக்கு வாய்ப்பு அளித்தால், இளைஞர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும்.இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், ஆலாம்பாளையம் டவுன் பஞ்., செயலாளர் செல்லதுரை, ஆனங்கூர் பஞ்., முன்னாள் தலைவர் சிங்காரவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

