sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைவால் வெல்லம் விலை சரிவு

வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைவால் வெல்லம் விலை சரிவு

வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைவால் வெல்லம் விலை சரிவு


ADDED : பிப் 01, 2024 11:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2024 11:10 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, பிலிக்கல்பாளையத்தில் நடந்த வெல்ல ஏலத்திற்கு, வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைவால், வெல்லம் விலை சரிவடைந்தது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் வட்டாரத்தில் பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில், கரும்பு சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இவற்றை, கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கிச் சென்று, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிக்கின்றனர்.

உற்பத்தி செய்த வெல்லத்தை, 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல மார்க்கெட்டில், சனி, புதன் கிழமைகளில் விற்பனை செய்கின்றனர். அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில், வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வராததால், வெல்லம் விலை சரிவடைந்தது.

கடந்த வாரம், 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,450 ரூபாய்க்கும், அச்சு வெல்லம், 1,700 -ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த வாரம் சற்று விலை குறைந்து, உருண்டை வெல்லம், 1,340 ரூபாய்க்கும், அச்சு வெல்லம், 1,380 ரூபாய்க்கும் விற்பனையானது.

நேற்று நடந்த ஏலத்தில், உருண்டை வெல்லம், 5,000 சிப்பம், அச்சு வெல்லம், 3,000 சிப்பம் ஏலத்திற்கு கொண்டுவந்தனர். ஏலத்தில், 1.8 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us