/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வி.ஏ.ஓ.,வை தாக்கியவரை கைது செய்யக்கோரி 4ம் நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்
/
வி.ஏ.ஓ.,வை தாக்கியவரை கைது செய்யக்கோரி 4ம் நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்
வி.ஏ.ஓ.,வை தாக்கியவரை கைது செய்யக்கோரி 4ம் நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்
வி.ஏ.ஓ.,வை தாக்கியவரை கைது செய்யக்கோரி 4ம் நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்
ADDED : அக் 18, 2024 07:03 AM
நாமக்கல்: 'வி.ஏ.ஓ.,வை தாக்கிய நபரை கைது செய்ய வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வருவாய் துறை கூட்டமைப்பினர், தொடர்ந்து நேற்று, நான்காம் நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் தாலுகா, கீரம்பூர் பிர்காவிற்கு உட்பட்ட நருவலுாரில், வி.ஏ.ஓ., வாக பணி யாற்றி வருபவர் ராமன். கடந்த, 4ல், அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள மரத்தை, விவசாயி திருமுருகன் அகற்றினார். இது குறித்த புகாரின் பேரில், வி.ஏ.ஓ., ராமன், மரம் அகற்றியது குறித்து திருமுருகனிடம் கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த திருமுருகன், வி.ஏ.ஓ., ராமனை தாக்கி உள்ளார். இது குறித்து, வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், விவசாயி திருமுருகனை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை.
அதனால், நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில், அனைத்து வருவாய் துறை கூட்டமைப்பினர், நான்காம் நாளாக நேற்றும், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், வருவாய் துறையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், வி.ஏ.ஓ.,வை தாக்கியவரை செய்ய வேண்டும்' என வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.
இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சரவணகுமார், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்த் உள்ளிட்ட, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர், 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.