/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
படித்துறையில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை குளிக்கவும், துவைக்கவும் முடியாமல் அவதி

ADDED : டிச 12, 2025 05:08 AM
பள்ளிப்பாளையம்: பெரியார் நகர் காவிரி ஆற்றங்கரையோரத்தில் உள்ள, படித்துறையை சுற்றிலும் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் அவதிப்படுகின்றனர்.
பள்ளிப்பாளையம் அடுத்த, பெரியார் நகர் காவிரி ஆற்றிங்கரையோரத்தில் படித்துறை உள்ளது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் துணி துவைக்கவும், குளிக்கவும் படித்துறைக்கு தினமும் வருவர். கடந்த ஒரு மாதமாக படித்துறை சுற்றிலும், ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதால் துணி துவைக்கவும், குளிக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், விஷ ஜந்துக்கள் உலா வருவதால், ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுத்து, படித்துறையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, குமாரபாளையம் நீர் வளத்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளிப்பாளையம் நகராட்சி, வருவாய்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.