/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கள் இறக்க அனுமதி கோரி வரும் 31ல் 'டாஸ்மாக்' கடைக்கு பூட்டு போராட்டம்

ADDED : ஆக 19, 2024 05:55 AM
நாமக்கல்: உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் வேலுசாமி வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில், தென்னை மரங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதனால் தேங்காய் விலை சரிவ-டைந்து, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமி-ழக விவசாயிகளின் நலன் கருதி, விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்ய, தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்கி, உடனடியாக கள்ளுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
தவறும்பட்சத்தில், தமிழ்நாடு உழவர் பெருந்தலைவர் நாராய-ணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், விவசா-யிகள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி, தமிழகத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை பூட்டு போட்டு போராட்டம் நடத்துவோம்.கடந்த, 7ல், நாமக்கல்லில் தென்னை மரத்தில் கள்ளு கட்டும் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கள் இறக்க அனுமதி கோரி வரும், 31 காலை, 11:00 மணிக்கு, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.