ADDED : ஜூன் 01, 2026 03:28 AM
அ நிறம் | அளவு
சேந்தமங்கலம்;உலக
பைக் தினத்தையொட்டி, சேந்தமங்கலம் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள
தனியார் திருமண மண்டபத்தில்ல நேற்று உலக டூவீலர் பழுது நீக்குவோர்
சங்கம் மூலம் மாபெரும் முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு, மாநில
பொதுச்செயலாளர் சசிக்குமார், துணை செயலாளர் சிதம்பரம் ஆகியோர் தலைமை
வகித்தனர்.
நாமக்கல் மாவட்ட தலைவர் சண்முக சுந்தரம், மாவட்ட
செயலாளர் நவலடி சேகர், பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், பயனுள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, மாநில சங்க
மூலம் நிதி வழங்குதல் மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. நாமக்கல்
மாவட்டத்தில் உள்ள டூவீலர் மெக்கானிக்குகள் அனைவரும்,
குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
