ADDED : அக் 14, 2024 05:29 AM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், வெங்கடேசபுரியை சேர்ந்த பெருமாள் மகன் தமிழரசன், 46. இவர் கடந்த, 19ல், 'யமாஹா' டூவீலரை வீட்டில் நிறுத்திவிட்டு, சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். நான்கு நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, டூவீலர் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மல்லசமுத்-திரம் போலீசில் புகார் அளித்தார். புகார்படி, டூவீலர் திருடனை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணியளவில், மல்லசமுத்-திரம் எஸ்.ஐ., ரஞ்சித்குமார் தலைமையிலான போலீசார், காளிப்-பட்டி பஸ் ஸ்டாப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த, சேலம் மாவட்டம், சாமிநாயக்-கன்பட்டியை சேர்ந்த செல்வம் மகன் ஜீவானந்தம், 25, என்ப-வரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் ஓட்டிவந்த டூவீலர் தமிழரசனுடையது என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஜூவா-னந்தத்தை கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.