/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கழிவுகளை கொட்ட வந்த வாகனம் சிறைபிடிப்பு
/
கழிவுகளை கொட்ட வந்த வாகனம் சிறைபிடிப்பு
ADDED : மார் 28, 2024 06:35 AM
பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் அருகே, காடச்சநல்லுார் பஞ்.,க்குட்பட்ட தாஜ்நகர் பகுதியில் இரவு நேரத்தில் தொழிற்சாலை கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை மக்கள் சிறைபிடித்தனர்.
இதுகுறித்து, காடச்சநல்லுார் பஞ்., துணை தலைவர் திருமூர்த்தி கூறியதாவது: காடச்சநல்லுார் பஞ்.,க்குட்பட்ட தாஜ்நகர் பகுதியில், இரவு நேரத்தில் வாகனத்தில் கொண்டு வந்து தொழிற்சாலை கழிவுகள் கொட்டுகின்றனர். இதனால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அருகில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு தொழிற்சாலை கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை சிறை பிடித்து, பள்ளிப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டோம். பொதுமக்களின் நலன் கருதி, தாஜ்நகர் பகுதியில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

