sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

3 மாதமாக குடிநீர் சப்ளை இல்லை அவினாசிப்பட்டி கிராம மக்கள் அவதி

/

3 மாதமாக குடிநீர் சப்ளை இல்லை அவினாசிப்பட்டி கிராம மக்கள் அவதி

3 மாதமாக குடிநீர் சப்ளை இல்லை அவினாசிப்பட்டி கிராம மக்கள் அவதி

3 மாதமாக குடிநீர் சப்ளை இல்லை அவினாசிப்பட்டி கிராம மக்கள் அவதி


ADDED : ஏப் 13, 2025 04:13 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் யூனியன், அவினாசிபட்டி பஞ்., 6வது வார்டு, அருந்ததியர் தெருவில், 70க்கும் மேற்பட்ட குடுயிருப்புகளில், 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில், 30,000 லிட்டர் கொள்ள-ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. பழமையான மேல்-நிலை தொட்டி பழுதடைந்ததால், புதிய நீர்த்தேக்க தொட்டி பஞ்., நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டது. இரண்டு மேல்நிலை தொட்டிகள் இருந்தும், இப்பகுதியில் கடந்த, மூன்று மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த கனகராஜ் கூறியதாவது:அவினாசிப்பட்டி அருந்ததியர் தெருவில், கடந்த, மூன்று மாத-மாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யாமல் உள்ளனர். இதனால், 2 கி.மீ., தொலைவில் இருசக்கர வாகனத்தில் சென்று குடிநீர் கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. தேவையான குடிநீர் கிடைக்காததால், உரிய நேரத்தில் வேலைக்கு செல்வது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது போன்ற பணிகள் பாதிக்-கின்றன. மேலும், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, எரி-பொருள் செலவு கூடுதலாகிறது. இதனால், பெரும் சிரமத்தை சந்-தித்து வருகிறோம். அதிகாரிகள் ஆய்வுசெய்து, முறையான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us