/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
/
மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
ADDED : மே 24, 2024 06:56 AM
மல்லசமுத்திரம் : மல்லசமுத்திரத்தில், கட்டடத்தில் வேலை செய்யும்போது, மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி பலியானார்.மல்லசமுத்திரம் அருகே, அக்கரைப்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் பழனிசாமி, 42.
கொத்தனாராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மல்லசமுத்திரம் வையப்பமலை சாலையில் உள்ள, அடுக்குமாடி கட்டடத்தில் மூன்றாவது மாடியில் கட்டட வேலை செய்து கொண்டிருந்தார். மாலை 3:00 மணியளவில் கால் தவறி கட்டடத்தின் மேலே இருந்து கீழே விழுந்தார். அவரை மீட்டு, சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இரவு, 9:00 மணிக்கு அவர் உயிரிழந்தார். இவருக்கு முத்துலட்சுமி, 38 என்ற மனைவி, சந்துரு என்ற மகன், கவுசல்யா என்ற மகள் உள்ளனர். மல்லசமுத்திரம் எஸ்.ஐ.,ரஞ்சித்குமார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.