/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எலச்சிபாளையம் அருகே வீடு, கோவிலில் திருட்டு
/
எலச்சிபாளையம் அருகே வீடு, கோவிலில் திருட்டு
ADDED : அக் 29, 2025 01:51 AM
எலச்சிபாளையம், எலச்சிபாளையம் அருகே, மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் சுப்ரமணி மனைவி தங்கமணி, 47; இவர் கடந்த, 26ல் ஈரோட்டில் உள்ள அண்ணன் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு, நேற்று காலை, 9:00 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த, இரண்டு தாலி காசு, அரை பவுன் தாலி என, மொத்தம் ஒரு பவுன், 15,000 ரூபாய் மதிப்பில் கால் கொழுசு ஒன்றும் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதேபோல், மொரங் கம் பகுதியில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காளியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, அரசம்பாளையத்தை சேர்ந்த பூசாரி முருகேசன், 61, என்பவர் வழக்கம்போல் பூஜை செய்துவிட்டு கோவிலை பூட்டிச்சென்றார். நேற்று காலை, 7:00 மணிக்கு முருகேசன் வந்து பார்த்தபோது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. சுவாமி கவசபெட்டி கோவிலுக்கு வெளியில் கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, அம்மனின் அரை கால்பவுன் தாலி காணவில்லை. எலச்சிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

