/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்
/
நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்
நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்
நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்
ADDED : மே 26, 2025 04:24 AM
ராசிபுரம்: ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் கவரைத்தெரு பகுதியில் சுற்று பொங்கல் விழா, நேற்று நடந்தது. முன்னதாக, சனிக்கிழமை இரவு கோவிலில் இருந்து அம்மன் அழைத்துவரப்பட்டது.
பின், அம்மன் தெப்ப உற்சவம் நடந்தது. நித்திய சுமங்கலி மாரியம்மன் மூலஸ்தானத்தில் மண் சுவர் எழுப்பி, நீர் நிரப்பி சிறப்பு பூஜை நடந்தது. நேற்று, அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, செல்லியாண்டிம்மன் கோவிலில் இருந்து அக்கினி சட்டி ஏந்தியவாறு பக்தர்கள் மேளதாளம் முழங்க நகரை சுற்றி வந்து மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொது-மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.