/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலை அடிவாரத்தில் கிராவல் மண் அள்ளுவதால் மலைச்சரிவு ஏற்படும் அபாயம்

ADDED : நவ 02, 2024 01:01 AM
எருமப்பட்டி, நவ. 2-
போடிநாய்க்கன்பட்டி அடிவாரத்தில் தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகளில் மண் அள்ளுவதால், மலைச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
எருமப்பட்டி யூனியன், கொல்லிமலை அடிவாரம், போடிநாய்க்கன்பட்டி, கெஜகோம்பை உள்ளது.
இந்த அடிவார பகுதியில் கட்டடங்களுக்கு பயன்படுத்தும் உரம்பு மண் (கிராவல்) அதிகளவில் உள்ளதால், இங்கிருந்து தினமும் சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நுாற்றுக்கணக்கான லாரிகளில், 24 மணி நேரமும் மண் அள்ளி வருகின்றனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் கூறியதாவது: போடிநாய்க்கன்பட்டி, கெஜகோம்பை பகுதியில் இருந்து தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகளில் மண் அள்ளுகின்றனர். விட்டமநாய்க்கன்பட்டியில் மண் அள்ள, 'பர்மீட்' வாங்கிக்கொண்டு, கெஜகோம்பை அடிவாரத்தில் இருந்து மண் அள்ளி வருகின்றனர்.
கொல்லிமலை அடிவார பகுதியான புதுக்கோட்டை பிரிவு கோம்பை, பொட்டிரெட்டிப்பட்டி கோம்பை, போடிநாய்க்கன்பட்டி, கெஜகோம்பை உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் மண் அள்ளுவதால் மழை காலங்களில் மலைச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அடிவார பகுதியில் இருந்து மண் அள்ளுவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.