ADDED : அக் 10, 2026 04:30 AM
அ நிறம் | அளவு
ராசிபுரம்:ராசிபுரம்
மனவளக்கலை மற்றும் அறக்கட்டளை சார்பில், மேட்டுத்தெரு
தவமையத்தில் அடிப்படை பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் முழு
உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, சாந்தி தவம் விளக்கம் மற்றும் தீட்சை
ஆகியவை முறைப்படி அளிக்கப்பட்டு, குருவின் மேன்மை குறித்த
விழிப்புணர்வு வகுப்புகளும் நடத்தப்பட்டன.
பயிற்சி வகுப்புகளை
பேராசிரியர் சுசிலா பெரியசாமி, துணை பேராசிரியர் அண்ணாமலை மற்றும்
சரோஜா கிருஷ்ணன் ஆகியோர் முன்னின்று நடத்தினர். இதில், ராசிபுரம்
மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், யோகா
ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.இதன் தொடர்ச்சியாக, காசி விநாயகர்
ஆலய தவமையத்தில் அடிப்படை பயிற்சி வகுப்பின் கீழ் இன்று காலை, 7:00 மணி
முதல், 8:00 மணி வரை சிந்தனை விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.
