/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்ப கல்லுாரி ஆண்டு விழா
/
திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்ப கல்லுாரி ஆண்டு விழா
திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்ப கல்லுாரி ஆண்டு விழா
திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்ப கல்லுாரி ஆண்டு விழா
ADDED : மார் 05, 2025 06:24 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்ப கல்லுாரியில், 31வது ஆண்டு விழா மற்றும் 'பீட்ஸ் என் ஸ்டெப்ஸ்' கலை விழா கொண்டாடப்பட்டது. கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சச்சின் முன்னிலை வகித்தார்.
கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். பெங்களூரு எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் குளோபல் இன்ஜினியரிங் அகாடமியின் குளோபல் தலைவர் கோடூர் பேசினார். முன்னாள் எஸ்.பி., கலியமூர்த்தி பேசுகையில், ''மொபைல் போன்களை சார்ந்திருப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உடல் தகுதி, அறிவு மேம்பாட்டிற்காக நேரத்தை செலவிட முடியும் மாணவர்கள், பெற்றோரின் தியாகம் அறிந்து, வாழ்க்கையில் மேன்மையடைய வேண்டும்,'' என்றார். படிப்பிலும், விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, கலை நிகழ்ச்சி நடந்தது.