/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இலங்கை தமிழர் முகாமில் திருமணிமுத்தாறு வெள்ளநீர் புகுந்து 200 வீடுகள் பாதிப்பு
/
இலங்கை தமிழர் முகாமில் திருமணிமுத்தாறு வெள்ளநீர் புகுந்து 200 வீடுகள் பாதிப்பு
இலங்கை தமிழர் முகாமில் திருமணிமுத்தாறு வெள்ளநீர் புகுந்து 200 வீடுகள் பாதிப்பு
இலங்கை தமிழர் முகாமில் திருமணிமுத்தாறு வெள்ளநீர் புகுந்து 200 வீடுகள் பாதிப்பு
ADDED : டிச 05, 2024 07:21 AM
ப.வேலுார்- திருமணி முத்தாற்றில் வெள்ளப்பெருக்கால், பரமத்தியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் தண்ணீர் புகுந்து, 200
வீடுகள் பாதிக்-கப்பட்டன. அங்கு வசித்தவர்களை பாதுகாப்பாக மீட்டு, பரமத்தி ஆண்கள்
மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.சேலம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, திருமணிமுத்-தாற்றில் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டுள்ளது. இதனால், திருமணி முத்தாறு பாய்ந்தோடும் பகுதிகளான பரமத்தி வேலுார் தாலுகா-வுக்கு
உட்பட்ட கூடச்சேரி, ராமதேவம், பள்ளபாளையம், கோதுார், மேல்சாத்தனுார், பில்லுார், வேலகவுண்டம்பட்டி,
எலச்-சிபாளையம், பரமத்தி, ப.வேலுார் அருகே பொய்யேரி ஆகிய பகு-திகளில், பாலங்களை மூழ்கடித்தபடி
வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அத்தியாவசிய பொருட்கள் வீண்
திருமணிமுத்தாற்றின் கரையோர பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர்
புகுந்ததால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கோரை, வாழைப்பயிர்கள் சேதம-டைந்தன. மேலும், பரமத்தியில்
உள்ள இலங்கை தமிழர் முகாமில், 417 குடியிருப்புகள் உள்ளன. இதில், 1,283 பேர் வசிக்-கின்றனர். நேற்று காலை,
8:00 மணியளவில் இப்பகுதியில் திரும-ணிமுத்தாறு வெள்ளநீர் புகுந்தது. பதறிபோன குடியிருப்பு வாசிகள்,
வீட்டில் இருந்த அத்தியாவசிய பொருட்களை எடுப்ப-தற்குள், 200 வீடுகளில் தண்ணீர் புகுந்து மளிகை பொருட்கள்
வீணாகின. திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி, பரமத்தி வேலுார் தாசில்தார் முத்துக்குமார், பரமத்தி டவுன் பஞ்.,
செயல் அலுவலர் சுப்பிரமணி ஆகியோர், 220க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்-பாக மீட்டு, பரமத்தி அரசு
ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தங்க வைத்தனர்.
போலீசார் பாதுகாப்பு
மேலும், திருமணிமுத்தாறு செல்லும் பாதையில் உள்ள பாலங்-களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
பொதுமக்கள் கடந்து செல்லாமல் இருக்க இருபுறமும் தடுப்பு வழிகள் அமைத்து பாது-காப்பு பணியில் போலீசார்
ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், பரமத்தியில் உள்ள, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில், நேற்று காலையில்
திருமணிமுத்தாறு தண்ணீர் புகுந்தது. காலையில் பணிக்கு வந்த ஊழியர்கள் செய்வ-தறியாது திகைத்தனர்.
தேங்கியுள்ள தண்ணீர் வெளியேறிய பிறகே பணிகள் தொடரும் என அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.போக்குவரத்து துண்டிப்பு
பரமத்தி அருகே உள்ள பொய்யேரி திருமணிமுத்தாற்றில் ஏற்-பட்ட வெள்ளப்பெருக்கால் ஒழுகூர்பட்டி,
ஊஞ்சபாளையம் கிரா-மங்களுக்கு செல்லும் தார்ச்சாலைகள் தண்ணீரில் மூழ்கி போக்கு-வரத்து தடைபட்டது.
இதேபோல், பரமத்தி காந்தி நகரிலும், 10க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம், தாழ்வான பகு-தியில் இருப்பதால் திருமணிமுத்தாற்றில்
வெள்ளப்பெருக்கு ஏற்ப-டும்போதெல்லாம் குடியிருப்புகளில் தண்ணீர் புகுவது வாடிக்கை-யாக உள்ளது.