/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருமாவளவன் இரட்டை வேடம் ஆதித்தமிழர் பேரவை குற்றச்சாட்டு
/
திருமாவளவன் இரட்டை வேடம் ஆதித்தமிழர் பேரவை குற்றச்சாட்டு
திருமாவளவன் இரட்டை வேடம் ஆதித்தமிழர் பேரவை குற்றச்சாட்டு
திருமாவளவன் இரட்டை வேடம் ஆதித்தமிழர் பேரவை குற்றச்சாட்டு
ADDED : நவ 25, 2024 03:07 AM
ராசிபுரம்: ஆதித்தமிழர் பேரவையின் மேற்கு மண்டல செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில், நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற தலைவர் அதியமான், நிருபர்களிடம் கூறியதாவது:
கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 2009ல், 18 சதவீதம் பட்டியல் இனத்திற்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் மக்க-ளுக்கு, 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கினார்.
இதை எதிர்த்து சில பேர் வழக்கு தொடர்ந்தனர். இதுபோன்ற வழக்கு மற்ற மாநி-லங்களிலும் இருந்ததால் பல ஆண்டு விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆக., 1ல் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை ஆதி தமிழர் பேரவை வரவேற்றது. முதல்வரை நேரில் சந்தித்தும் பாராட்-டினோம்.இதை எதிர்த்து விடுதலை சிறுத்தை கட்சிகள் தலைவர் திருமா-வளன் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார். எங்கள் கோரிக்-கைகளை வலியுறுத்தி, சென்னையில் டிச., 23ல் மாபெரும் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தவுள்ளோம். எங்களுக்கு அரசிய-லிலும் பங்கு கேட்டு முதல்வரிடம் மனு கொடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.