/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'தி.மு.க., உடன் திருமாவளவன் இருப்பது தலித் சமுதாயத்திற்கு செய்யும் துரோகம்'
/
'தி.மு.க., உடன் திருமாவளவன் இருப்பது தலித் சமுதாயத்திற்கு செய்யும் துரோகம்'
'தி.மு.க., உடன் திருமாவளவன் இருப்பது தலித் சமுதாயத்திற்கு செய்யும் துரோகம்'
'தி.மு.க., உடன் திருமாவளவன் இருப்பது தலித் சமுதாயத்திற்கு செய்யும் துரோகம்'
ADDED : ஜூலை 17, 2025 02:25 AM
நாமக்கல், ''வரும், 2026 தேர்தலில், திருமாவளவன் என்ன வியூகம் வகுக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் வழங்க வேண்டியுள்ளது. தி.மு.க., உடன் அவர் இருந்தால், தலித் சமுதாயத்திற்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் என அவருக்கு தெரிந்தும், வேறு வழியில்லாமல் தான், அந்த கூட்டணியில் உள்ளார்,'' என, பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் பேசினார்.
நாமக்கல் மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், பா.ஜ., - அ.தி.மு.க., நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, பா.ஜ., மாநில துணை தலைவர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகி கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், ''தேர்தல் ஆதாயத்தை மனதில் வைத்து, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த, நான்கரை ஆண்டுகளில், மக்கள் நலனைப்பற்றி ஆளும், தி.மு.க., அரசு கவலைப்
படாமல், எந்த சந்திப்பு நடத்தினாலும், மக்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை,'' என்றார்.
பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் பேசியதாவது: வரும், 2026 சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று, அ.தி.மு.க., சார்பில் இ.பி.எஸ்., ஆட்சி அமைப்பார். தி.மு.க., கூட்டணி உடைய வாய்ப்பு இருக்கிறது. இன்னும் சில நாட்களில், வி.சி., தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து பேச உள்ளேன். வரும், 2026 தேர்தலில், திருமாவளவன் என்ன வியூகம் வகுக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் வழங்க வேண்டியுள்ளது. தி.மு.க., உடன் அவர் இருந்தால், தலித் சமுதாயத்திற்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் என அவருக்கு தெரிந்தும், வேறு வழியில்லாமல் தான், அந்த கூட்டணியில் உள்ளார். பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்காக உழைக்கும் இயக்கங்களாக, அ.தி.மு.க., - பா.ம.க., இரட்டை குழல் துப்பாக்கி களாக திகழ்கின்றன. வன்னிய சமுதாய மக்களுக்கு, இட ஒதுக்கீட்டை வழங்கியது, அ.தி.மு.க., அரசு தான். அதனால், வன்னியர் சமுதாயத்திற்கு தலைவரும் இ.பி.எஸ்., தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
எம்.எல்.ஏ., சேகர், முன்னாள்
எம்.எல்.ஏ., பாஸ்கர், பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார், கரூர் மாவட்ட தலைவர் செந்தில், அ.தி.மு.க., - பா.ஜ., மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள்
உள்பட பலர் பங்கேற்றனர்.