/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை சார்பில் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்

ADDED : ஜன 16, 2025 06:39 AM
நாமக்கல்: பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை சார்பில், நாமக்கல்லில் நடந்த திருவள்ளுவர் தினவிழாவில், எம்.பி., மாதேஸ்வரன் பங்கேற்று, பொதுமக்களுக்கு, 'புறநானுாறு' புத்தகங்களை வழங்கினார்.
திருவள்ளுவர் தினம் என்பது புகழ்பெற்ற தமிழ் புலவர் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக, தமிழக அரசால் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும், பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக, தை இரண்டாம் நாள், மாட்டுப்பொங்கல் அன்று கொண்டாடப்படுகிறது. பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை சார்பில், நாமக்கல் மணிக்கூண்டு அருகே, திருவள்ளுவர் தினவிழா கொண்டாடப்பட்டது. பேரவை தலைவர் புலவர் கருப்பண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ரகோத்தமன் வரவேற்றார். நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் பங்கேற்று, திருவள்ளுவர் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அனைவருக்கும் இலவசமாக, 'புறநானுாறு' புத்தகங்களை வழங்கினார்.
அப்போது, 'நாமக்கல்லில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக' எம்.பி., உறுதி அளித்தார். விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பேரவை பொருளாளர் மதியழகன், பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி, முன்னாள் சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் சுப்ரமணி, தமிழ் அறிஞர்கள், புலவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.