/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரங்கநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை
/
அரங்கநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED : ஜன 13, 2025 02:50 AM
நாமக்கல்: ஹிந்து சமய பேரவையின், திருப்பாவை குழு சார்பில், நாமக்-கல்லில், 53ம் ஆண்டாக மார்கழி திருவிழா நடத்தப்படுகிறது.
அதில், நாமக்கல் அரங்கநாதர் சுவாமி கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அதேபோல், ஒவ்-வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதிகாலை, 5:00 மணிக்கு பக்-தர்கள் கையில் விளக்கேந்தி மலைக்கோட்டையை சுற்றி ஊர்-வலம் வந்து சுவாமியை வழிபட்டனர்.அதேபோல், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாராயணம் மற்றும் கூட்டு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, உலக நன்மை வேண்டி அரங்க-நாதர் கோவில் வளாகம் மற்றும் படிவாசலில் பக்தர்கள் திருவி-ளக்கு பூஜை செய்தனர்.
தொடர்ந்து, கூடார வல்லி உற்சவ விழா நடந்தது. அங்கு அலங்க-ரிக்கப்பட்ட மலர் பந்தலில் அரங்கநாதர் சமேத அரங்கநாயகி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.