/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., சாலையில் 20 நிமிடம் பெய்த மழைக்கே இந்த நிலை
/
பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., சாலையில் 20 நிமிடம் பெய்த மழைக்கே இந்த நிலை
பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., சாலையில் 20 நிமிடம் பெய்த மழைக்கே இந்த நிலை
பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., சாலையில் 20 நிமிடம் பெய்த மழைக்கே இந்த நிலை
ADDED : மே 27, 2025 01:41 AM
பள்ளிப்பாளையம் பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., சாலையில் செல்லும் சாக்கடை கால்வாயில் அடைப்பால், மழைநீருடன், கழிவுநீரும் பாய்ந்தோடியதால் மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், நேற்று மதியம், 1:30 மணிக்கு தொடங்கிய மழை, 20 நிமிடம் வரை வெளுத்து கட்டியது. இந்நிலையில், ஆர்.எஸ்., சாலையில் செல்லும் வடிகாலில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்கள் அதிகளவு அடைத்திருந்ததால், கழிவுநீர் தொடர்ந்து செல்ல வழியில்லை. இதனால் சாக்கடை கால்வாய் நிரம்பி, மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து சாலையில் ஆறாக பாய்ந்தோடியது. இதில், வடிகாலில் இருந்த குப்பை, பிளாஸ்டிக் கவர் உள்ளிட்டவை சாலையில் பரவி கிடந்தன.
சாலையில், மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள், நடந்துசென்ற பொதுமக்கள் தத்தளித்தபடி சென்றனர். 20 நிமிடம் பெய்த மழைக்கே இந்த நிலை என்றால், ஒரு மணி நேரம் மழை பெய்தால் சாலையில் சென்ற மழைநீர், அருகே உள்ள குடியிருப்பு, கடைகளிலும் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கும்.
தற்போது, பருவமழை காலம் என்பதால், பள்ளிப்பாளையம் நகராட்சி நிர்வாகம், சாலையோரம், மற்றும் குடியிருப்பு பகுதியில் செல்லும் வடிகாலை துார்வாரி பராமரிப்பு செய்து, மழைநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.