டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் செய்தவர்கள் கைது
டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் செய்தவர்கள் கைது
ADDED : அக் 01, 2026 02:47 AM
அ நிறம் | அளவு
எருமப்பட்டி: எருமப்பட்டி டவுன் பஞ்., ஐந்து ரோட்டில் குடியிருப்புகளுக்கு நடுவே டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையால் பெண்கள், குழந்தைகள் அந்த பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனக்கோரி, கடந்த, 27ல், 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தில் ஈடுபட முயன்ற, 20க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் கைது செய்தனர்.
