ADDED : ஜூன் 27, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி, எருமப்பட்டி அருகே, மது போதையில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் மூவரை போலீசார் கைது செய்தனர்.
எருமப்பட்டி யூனியன், வரகூரை சேர்ந்தவர் மோகன், 45. இவரும், இவரது நண்பர் சத்தியராஜ், 47. என்பவரும், நேற்று முன்தினம் இரவு பவித்திரத்தில் இருந்து வரகூருக்கு டூவீலரில் வந்துள்ளனர். அப்போது,
அதே கிராமத்தை சேர்ந்த அஜய் கண்ணன், 21, ஆதித்யா, 23, சீமான், 24, ஆகியோரும் டூவீலரில் வந்துள்ளனர். அப்போது, மது போதையில் இருந்த இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கை கலப்பாக மாறியது. இதில் மோகன், சத்தியராஜூக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மோகன் கொடுத்த புகார்படி வழக்கு பதிவு செய்த போலீசார், அஜய் கண்ணன், ஆதித்யா, சீமான் ஆகியோரை கைது செய்தனர்.