ADDED : ஜூலை 03, 2026 04:47 AM
அ நிறம் | அளவு
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே, சேவல் சண்டையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சேந்தமங்கலம்
அருகே சின்ன பள்ளம்பாறை பகுதியில், சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர்
அந்தோணி மைக்கேல் தலைமையில், எஸ்.ஐ., கார்த்திகேயன் மற்றும் போலீசார்
ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இரட்டை கம்பம் அருகே உள்ள ஒரு
தோட்டத்தில், 6 பேர் சேவல் சண்டையில் ஈடுபட்டிந்தது தெரியவந்தது.
போலீசார்
வருவதை கண்டதும், 6 பேரும் ஓடினர். அதில் மணி, 35, மூர்த்தி, 36,
பாஸ்கர், 33, ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 சேவல், 3
டூவீலர் மற்றும் ரொக்கம் ரூ. 1,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தப்பியோடிய பாரி, பிரகாஷ் மற்றும் நேரு ஆகியோரை தேடி வருகின்றனர்.
