/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் வேலை வாங்கி தருவதாக வாலிபர்களிடம் பணம் பறித்த மூவர் கைது
/
நாமக்கல்லில் வேலை வாங்கி தருவதாக வாலிபர்களிடம் பணம் பறித்த மூவர் கைது
நாமக்கல்லில் வேலை வாங்கி தருவதாக வாலிபர்களிடம் பணம் பறித்த மூவர் கைது
நாமக்கல்லில் வேலை வாங்கி தருவதாக வாலிபர்களிடம் பணம் பறித்த மூவர் கைது
ADDED : மே 27, 2025 01:42 AM
நாமக்கல்,வேலை வாங்கி தருவதாக, நாமக்கல் வரவழைத்து, ஜார்க்கண்ட் மாநில வாலிபர்களை மிரட்டி பணம் பறித்த, கிருஷ்ணகிரியை சேர்ந்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கபூர் அன்சாரி, 29, முன்சா அன்சாரி, 27, முகமது உஸ்மான், 26 ஆகிய மூவரும் வேலை தேடி தமிழகம் வந்தனர். அப்போது, அவர்களிடம் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை சேர்ந்த நிஷாந்த், 28, பிரபு, 26, அருள், 26 ஆகியோர், வேலை வாங்கி தருவதாக கூறி, நாமக்கல்லுக்கு வரவழைத்தனர். அவர்கள், மூவரையும் ஒரு காரில் ஏற்றிக்கொண்டு, நாமக்கல் பகுதியில் சுற்றினர். தொடர்ந்து, ஜார்க்கண்டில் இருந்து வேலை தேடி வந்த, மூவரின் குடும்பத்தினரையும் தொடர்புகொண்டு, தலா, 20,000 ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதனால், பயந்துபோன அவர்களது குடும்பத்தினர், போச்சம்பள்ளியை சேர்ந்த கும்பலுக்கு, 80,000 ரூபாய் அனுப்பி உள்ளனர். பணம் கிடைத்ததும், ஜார்க்கண்ட் வாலிபர்களின் மொபைல் போன்களை பறித்துக்கொண்டு, அவர்களை, நாமக்கல் - சேலம் சாலையில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, காரில் இருந்து இறக்கிவிட்டு சென்றனர். அப்போது, அந்த வழியாக வந்த நாமக்கல் ஏ.எஸ்.பி., ஆகாஷ் ஜோஷி, நாமக்கல் போலீஸ் எஸ்.ஐ., சாந்தகுமார் ஆகியோர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், நடந்த விபரங்களை தெரிவித்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், நிஷாந்த், பிரபு, அருள் ஆகிய, மூவரையும் கைது செய்து, 43,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட பிரபு, அருள் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நாமக்கல் சிறையில் அடைத்தனர். நிஷாந்திற்கு உடல்நிலை சரியில்லாததால், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகிறார்.