/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிராவல் மண் கடத்திய மூன்று பேர் கைது
/
கிராவல் மண் கடத்திய மூன்று பேர் கைது
ADDED : மார் 15, 2024 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: கடம்பூர் போலீசார், கடம்பூர் அருகே குன்றி பிரிவில், நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடம்பூர் நோக்கி கிராவல் மண் ஏற்றிய டிராக்டர் வந்தது. நிறுத்தி சோதனை செய்ததில், கடம்பூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் வீட்டு உபயோகத்துக்கு ஏற்றிச் செல்வதும், உரிய அனுமதி இல்லாததும் தெரிந்தது.
டிராக்டரை ஓட்டி வந்த கடம்பூர் பாரஸ்ட் ஆபிஸ் பகுதி பெருமாள், 38; ஜீவா நகரை சேர்ந்த சடையப்பன், 34, தங்கவேல், 28, என தெரிந்தது. டிராக்டரை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்தனர்.

