/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆற்றோர மக்களை தங்க வைக்க மூன்று முகாம்கள் அமைப்பு
/
ஆற்றோர மக்களை தங்க வைக்க மூன்று முகாம்கள் அமைப்பு
ADDED : ஜூலை 30, 2025 01:31 AM
பள்ளிப்பாளையம், ஆற்றோரம் மக்களை தங்க வைக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிப்பாளையத்தில் தயார் நிலையில் மூன்று முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிப்பாளையம் பகுதியில், காவிரி ஆற்றங்கரையோரத்தில் அக்ரஹாரம், சந்தைபேட்டை, ஜனதாநகர், பெரியார் நகர் உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. தற்போது, மேட்டூர் அணை முழு கொள்ளளவு எட்டியதால், அணைக்கு வரும் தண்ணீர், முழுமையாக வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பள்ளிப்பாளையம் பகுதியில், ஆற்றின் இருகரையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இன்னும் தண்ணீர் வரத்து அதிகமானால், பள்ளிப்பாளையம் பகுதி யில் ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகளில் தண்ணீர் செல்ல வாய்ப்புள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, வருவாய்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கால் பாதிப்பு ஏற்பட்டால், மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க, ஆவாரங்காடு பகுதியில் உள்ள நகராட்சி மண்டபம், சந்தைபேட்டையில் உள்ள தனியார் மண்டபம் மற்றும் நாட்ட கவுண்டம்புதுார் பகுதியில் உள்ள அரசு பள்ளி என, மூன்று முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த முகாம்களை நேற்று முன்தினம் இரவு, மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி ஆய்வு செய்தார்.