/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'வாக்கிங்' சென்ற தம்பதி உள்பட மூவர் பலி மோகனுார் அருகே அதிகாலையில் விபத்து
/
'வாக்கிங்' சென்ற தம்பதி உள்பட மூவர் பலி மோகனுார் அருகே அதிகாலையில் விபத்து
'வாக்கிங்' சென்ற தம்பதி உள்பட மூவர் பலி மோகனுார் அருகே அதிகாலையில் விபத்து
'வாக்கிங்' சென்ற தம்பதி உள்பட மூவர் பலி மோகனுார் அருகே அதிகாலையில் விபத்து
ADDED : டிச 03, 2024 07:28 AM
நாமக்கல்: மோகனுார் அருகே அதிகாலையில் நடைபயிற்சி சென்ற தம்பதி உள்பட மூன்று பேர்,
ஆம்னி வேன் மோதியதில் பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது.நாமக்கல் மாவட்டம் மோகனுார், ராசிபாளையம் பஞ்., ஏரியூரார் தோட்டம், காட்டூரை
சேர்ந்தவர் மலையண்ணன், 70; ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியர். இவரின் மனைவி
நிர்மலா, 55; தம்-பதியருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி
கனடாவில் உள்ளனர். காட்டூரை சேர்ந்தவர் செல்லம்மாள், 65; இவர்கள் மூவரும்
நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நாமக்கல் சாலையில் நடைபயிற்சியில்
ஈடுபட்டிருந்தனர்.
அப்போது லேசான மழை பெய்து கொண்டிருந்தது. மோகனுார், பாம்பாட்டி தெருவை
சேர்ந்த மீன் வியாபாரி மணிகண்டன். நாமக்கல் சென்று மீன் வாங்கிக்கொண்டு, ஆம்னி
வேனில் மோகனுார் திரும்பினார். காட்டூர், உப்பாத்துபாலம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, நடந்து சென்று
கொண்டிருந்த, மூவர் மீதும் வேன் மோதியது. பிறகு சாலையோரம் நடப்பட்டிருந்த
பெயர் பலகை கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் துாக்கி வீசப்பட்ட
மலை-யண்ணன், நிர்மலா, செல்லம்மாள் என மூவரும் சம்பவ இடத்தில் பலியாகினர்.
மோகனுார் போலீசார் உடல்களை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி
மருத்துவமனைக்கு அனுப்-பினர். விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன்,
நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.