/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாகன சோதனையில் பேரிகார்டு மீது பைக் மோதி விழுந்ததில் எஸ்.ஐ.,க்கள் உள்பட மூவர் படுகாயம்

ADDED : ஆக 10, 2025 12:50 AM
நாமக்கல், வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற பைக், பேரிகார்டு மீது மோதி விழுந்ததில், எஸ்.ஐ.,க்கள், வாகன ஓட்டி உள்பட, மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
நாமக்கல்-திருச்சி சாலை, எஸ்.கே.நகர் பிரிவில், எஸ்.ஐ.,க்கள் சரண்யா, சந்தியா, சிறப்பு எஸ்.ஐ.,க்கள் ஆனந்தகுமார், பழனிசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர், நேற்று மாலை, 4:30 மணிக்கு, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வேப்பனம்புதுார் பகுதியில் இருந்து நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்ட் நோக்கி டூவீலரில் வந்த வாலிபரை நிறுத்த சைகை காண்பித்தனர். ஆனால், அந்த வாலிபர் நிறுத்தாமல், வேகமாக சென்றபோது பேரிகார்டில் மோதினார்.இதில், பேரிகார்டு சரிந்து விழுந்ததில், எஸ்.ஐ., சரண்யாவுக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதேபோல், சிறப்பு எஸ்.ஐ., ஆனந்தகுமாருக்கும் தொடையில் காயம் ஏற்பட்டது. மேலும், டூவீலரில் வந்த வாலிபரும் படுகாயமடைந்தார். அவர்களை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதில், சிறப்பு எஸ்.ஐ., ஆனந்தகுமார் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். எஸ்.ஐ., சரண்யா மேல் சிகிச்சைக்காக கோவை அனுப்பி வைக்கப்பட்டார்.
விசாரணையில், டூவீலரில் வந்தவர், எருமப்பட்டி அடுத்த காவக்காரன்பட்டியை சேர்ந்த சிவா, 25, என்பதும், விவசாய தோட்டங்களில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார் என்பதும் தெரியவந்தது. நாமக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.