/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெங்காயத்தில் வேர் அழுகல் நோய் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு 'டிப்ஸ்'
/
வெங்காயத்தில் வேர் அழுகல் நோய் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு 'டிப்ஸ்'
வெங்காயத்தில் வேர் அழுகல் நோய் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு 'டிப்ஸ்'
வெங்காயத்தில் வேர் அழுகல் நோய் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு 'டிப்ஸ்'
ADDED : நவ 08, 2025 04:09 AM
ராசிபுரம்: ராசிபுரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கார்த்திகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராசிபுரம் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அடி அழுகல் நோய் தாக்குதலை கட்டுப்ப-டுத்தும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் பின்பற்-றலாம். ராசிபுரம் வட்டாரத்தில் சின்ன வெங்காயம், 601 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர் நடவு செய்து, 20 முதல், 30 நாட்களில் அடி அழுகல் எனப்படும் திருகல் நோய் தொற்று ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த தர-மான விதைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். விதை நேர்த்தி செய்வதற்கு, ஒரு கிலோ விதைக்கு, 10 கிராம் சூடோ-மோனாஸ் அல்லது 5 கிராம் டிரைகோடெர்மா விரிடி சேர்த்து, 24 மணி நேரம் ஊரவிட்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். கடைசி உழவின் போது, ஏக்கருக்கு ஒரு கிலோ டிரைகோடெர்மா விரிடி, ஒரு கிலோ சூடோமோனாஸ், ஐந்து கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை, 100 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து, ஏழு நாட்கள் வைத்திருந்து பின் நிலத்தில் இடலாம். இதனால் மண்ணில் உள்ள நோய் ஏற்படுத்தும் பூஞ்சானம் குறைவதுடன் நோய் பாதிப்பும் குறையும். சின்ன வெங்காய பயிரில் அடி அழுகல் நோய் பாதிப்பு தென்பட்டால், புரோபிகோனசால், 25 ஈசி அல்லது ஹெக்செகோனசோல், 5 ஈசி பூஞ்சான கொல்லியை ஏக்கருக்கு, 200 மி.லி., வீதம் நன்கு கலந்து கை தெளிப்பான் அல்-லது பேட்டரியால் இயங்கும் தெளிப்பான் மூலம் பயிரின் அடி-பாகம் வரை நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

