/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொழில் நிறுவனங்களுடன் ஆலோசித்து மின் தடை டயர் ரீட்ரெட்டிங் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
/
தொழில் நிறுவனங்களுடன் ஆலோசித்து மின் தடை டயர் ரீட்ரெட்டிங் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
தொழில் நிறுவனங்களுடன் ஆலோசித்து மின் தடை டயர் ரீட்ரெட்டிங் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
தொழில் நிறுவனங்களுடன் ஆலோசித்து மின் தடை டயர் ரீட்ரெட்டிங் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
ADDED : ஜூன் 23, 2025 04:59 AM
நாமக்கல்: 'தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து, முறையாக மின் நிறுத்தம் அறிவிக்க வேண்டும்' என, நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரெட்டிங் உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரவிச்சந்-திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் பகுதி லாரி தொழில் நிறைந்த பகுதியாகும். இதை சார்ந்து, நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு சிறு, குறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதை நம்பி, பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வரு-கின்றன. மேலும், நாமக்கல் பகுதியின் முக்கிய வாழ்வாதாரங்-களில் லாரி தொழில் குறிப்பிடத்தக்கது.
பிற மாவட்டங்களை சேர்ந்த லாரிகள் பல்வேறு பணிகளுக்காக நாமக்கல் நகருக்கு வந்து செல்கின்றன. லாரி தொழிலின் முக்-கிய அங்கமாக விளங்கும் டயர்
ரீட்ரெட்டிங் தொழில்,
தமிழகத்தில் அதிக அளவில் நாமக்கல்லில் உள்ளது.
பல்வேறு இடர்பாடுகளால், இந்த தொழில் நலிவடைந்து வரும் நிலையில், நாமக்கல்லில் மின்வாரிய அதிகாரிகள் ஒவ்வொரு முறையும், மாதாந்திர பராமரிப்புக்காக மின்சார நிறுத்தம் அறி-விப்பு வெளியிட்டு, மின் நிறுத்தத்திற்கு முதல் நாள் இரவில் அவற்றை ரத்து செய்கின்றனர். இந்த நடைமுறை தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இதனால், டயர் ரீட்ரெட்டிங், பாடி பில்டிங், வெல்டிங் லேத் உள்-ளிட்ட பட்டறை நிறுவனங்கள், மின் சப்ளை இருக்காது என தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிப்பதால், பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. மேலும், லாரி தொழில் சார்ந்த பட்டறை உரிமையாளர்களும், தொழிலாளர்களும், லாரி உரிமையாளர்-களும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, மின் வாரியம், மாதாந்திர மின்சார நிறுத்தம் அறிவிப்பை முன்கூட்டியே தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து முறையாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.