தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்


ADDED : செப் 15, 2026 07:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 07:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரம் வடக்கு வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில், கடந்தாண்டு செப்., 15ல் கும்பாபிஷேகம் நடந்தது. இன்று, காந்திபுரம் வடக்கு வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் வருடாந்திர விழா நடைபெற உள்ளது. அதையொட்டி, நேற்று மாலை, 5:00 மணிக்கு வாணவேடிக்கை மற்றும் மேளதாளம் முழங்க தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

காந்திபுரம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள கிருஷ்ணர் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், சேந்தமங்கலம் - ராசிபுரம் சாலை, அண்ணா நகர் பஸ் ஸ்டாப் வழியாக கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us