ADDED : நவ 19, 2026 05:40 AM

அ நிறம் | அளவு
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம்,
கணக்கர் தெருவில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில், சில ஆண்டுகளுக்கு
முன் பாலாலயம் செய்யப்பட்டது. திருப்பணிகள் முடிந்ததை அடுத்து
கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, நாளை கும்பாபிஷேகம்
நடக்க உள்ளது.
கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று மோகனுார் காவிரி
ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, அக்ரஹாரம்
பகுதியில் அமைந்துள்ள முத்து விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளம்
முழங்க தீர்த்தக்குட ஊர்வலம், அரசமரம் பஸ் ஸ்டாப், கடைவீதி வழியாக
பகவதி அம்மன் கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து, தீர்த்தக்குடம்
எடுத்து வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
