/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலர் மீது கல்லுாரி பஸ் மோதி டி.என்.பி.எல்., தொழிலாளி பலி
/
டூவீலர் மீது கல்லுாரி பஸ் மோதி டி.என்.பி.எல்., தொழிலாளி பலி
டூவீலர் மீது கல்லுாரி பஸ் மோதி டி.என்.பி.எல்., தொழிலாளி பலி
டூவீலர் மீது கல்லுாரி பஸ் மோதி டி.என்.பி.எல்., தொழிலாளி பலி
ADDED : நவ 12, 2025 01:13 AM
மோகனுார், மோகனுார் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட காக்கா தோப்பை சேர்ந்தவர் சதீஷ்குமார், 37; இவர், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் டி.என்.பி.எல்.,லில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை, 6:00 மணிக்கு, டி.வி.எஸ்., ஜூபிடர் டூவீலரில், மோகனுாரில் இருந்து ப.வேலுார் சாலையில் சென்று கொண்டிருந்தார். அதேபோல், ப.வேலுாரில் இருந்து மோகனுார் நோக்கி தனியார் கல்லுாரி பஸ்
சென்றது.
மோகனுார் அடுத்த வள்ளியம்மன் கோவில் அருகே சென்றபோது, டூவீலர் மீது கல்லுாரி பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில் இறந்த சதீஷ்குமாருக்கு, மீனா, 27 என்ற மனைவியும், தன்விக், 4, ரோசன்,
6 என, இரண்டு மகன்கள் உள்ளனர்.