/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, 2ஏ மாதிரி தேர்வு: 75 பேர் பங்கேற்பு
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, 2ஏ மாதிரி தேர்வு: 75 பேர் பங்கேற்பு
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, 2ஏ மாதிரி தேர்வு: 75 பேர் பங்கேற்பு
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, 2ஏ மாதிரி தேர்வு: 75 பேர் பங்கேற்பு
ADDED : ஜூலை 23, 2025 01:46 AM
நாமக்கல், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வுக்கான மாதிரி தேர்வு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் துவங்கியது. அதில், 75க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வுக்கான முழு பாடத்திட்டத்தையும் உள்ளடக்கிய மாதிரி தேர்வுகள், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நேற்று துவங்கியது.
இத்தேர்வானது, மண்டல அளவில் ஏழு மாவட்டங்கள் உள்ளடக்கி, டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையத்தால் நடத்தப்படும் அசல் தேர்வை போன்றே வாரந்தோறும், செவ்வாய்கிழமை நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று மாதிரி தேர்வு துவங்கியது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா பார்வையிட்டார். அதில், மாவட்டம் முழுவதும் இருந்து, 75க்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.