/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'வங்கி முன்னேற்ற பாதைக்கு செல்ல நகை, மகளிர் குழுக்கடன் வழங்கணும்'
/
'வங்கி முன்னேற்ற பாதைக்கு செல்ல நகை, மகளிர் குழுக்கடன் வழங்கணும்'
'வங்கி முன்னேற்ற பாதைக்கு செல்ல நகை, மகளிர் குழுக்கடன் வழங்கணும்'
'வங்கி முன்னேற்ற பாதைக்கு செல்ல நகை, மகளிர் குழுக்கடன் வழங்கணும்'
ADDED : டிச 01, 2025 02:52 AM
நாமக்கல்: ''வங்கியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல, நகை கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், வீட்டு கடன், வீட்டு அட-மான கடன் வழங்க வேண்டும்,'' என, தமிழக கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார்.
தமிழக கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனரும், கூடுதல் பதிவாளருமான ரவிச்சந்திரன் நேற்று, நாமக்கலுக்கு வருகை தந்தார். நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி-வாளர் அருளரசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் சந்தானம், நாமக்கல் கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலைய முதல்வர் செல்வி, நாமக்கல் கூட்டுறவு நகர வங்கி மேலாண் இயக்குனர் பால் ஜோசப் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, நாமக்கல்-திருச்செங்கோடு சாலை, மாரப்பநாயக்கன்-பட்டியில், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்-வையிட்டார். இதையடுத்து, கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள சிலுவம்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், தமிழக கூட்டுறவு ஒன்றியம், திறன்மேம்பாட்டு கழகம் சார்பில் நடத்தும், நாமக்கல் மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்-கங்களில், வேளாண் இயந்திர சேவை மையங்களில் உள்ள இயந்-திரங்களை இயக்குபவர்களுக்கு, பழுது பார்த்தல் மற்றும் பராம-ரித்தல் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சியை, தமிழக கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.இதையடுத்து, 'சர்வதேச கூட்டுறவு ஆண்டு-2025' முன்னிட்டு, சிலுவம்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளா-கத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை பார்வையிட்ட ஒன்றிய மேலாண் இயக்குனர் ரவிச்சந்திரன், அதன் செயல்பாடுகள், பணிகள் குறித்தும், அங்-குள்ள வைப்புத்தொகை, வழங்கப்பட்டுள்ள கடன்கள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, 'வங்கி முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல, நகை கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், வீட்டுக்கடன், வீட்டு அடமான கடன்கள் வழங்க வேண்டும்' என, அறிவுறுத்தினார்.
கூட்டுறவு சார் பதிவாளர்கள் அமுதா, ராஜேஸ்வரி, சுரேஷ், பிரேமலதா, சரவணன், துணை முதல்வர் காயத்ரி, பயிற்சி நிலைய விரிவுரையாளர்கள், துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்-றனர்.

